வெளியில் செல்ல பயப்பபடும் அஜித்தின் ரீல் மகள்...எதனால் தெரியுமா?
அஜித் படங்களில் அவருக்கு மகளாக நடித்த அனிகா சுரேந்திரன் வெளியே செல்ல பயப்படுவதாக தெரிவித்துள்ளார். அஜித் நடித்த ’என்னை அறிந்தால்’ திரைப்படத்திலும் ‘விஸ்வாசம்’ திரைப்படத்திலும் அவருக்கு மகளாக நடித்தவர் அனிகா சுரேந்திரன். இவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் விதவிதமான போட்டோ ஷூட் புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்.
இந்த நிலையில் அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தின் ஸ்டோரியில் ’நான் ‘விஸ்வாசம்’ திரைப்படத்தில் நன்றாக நடித்துள்ளதாக பலரும் என்னை பாராட்டுகின்றனர்.
ஆனால் அதே நேரத்தில் என்னிடம் பலர் கூறுவது என்னவென்றால் நான் மிகவும் உயரம் குறைவாக இருக்கிறேன் என்றும் இன்னும் நான் வளர வேண்டும் என்றும் கூறி வருகின்றனர். இதன் காரணமாகத்தான் நான் அதிகமாக வெளியே செல்வதில்லை என்று அவர் வருத்தத்துடன் கூறியுள்ளார்.