நடிகர் ரஜினியை நேரில் சந்தித்த அஜித் - வைரலாகும் புகைப்படம்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜீத். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. ‘தல’ என்று இவரை ரசிகர்கள் அன்போடு அழைத்து வருகிறார்கள்.
நடிகர் அஜீத்தின் 60-வது படமாக உருவான படமான ‘வலிமை’ சமீபத்தில் வெளியானது. ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் ‘வலிமை’ திரைப்படம் வெளியாகி ‘பாக்ஸ் ஆபிஸி’ல் வசூலை குவித்தது.
தற்போது, நடிகர் அஜித் மீண்டும் ஹெச்.வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் 'ஏகே 61' என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது.இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடிக்கிறார்.
இந்நிலையில் நடிகர் அஜித், நடிகர் ரஜினிகாந்த் வீட்டிற்கு சென்று நேரில் சந்தித்துள்ளதாக, இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.