Tuesday, Jul 8, 2025

‘’ எங்களின் வலிமையைசட்டசபையும் அறியும்” - தூங்கநகரம் அஜித் ரசிகர்கள் போஸ்டரால் சர்ச்சை

ajith viral madurai poster
By Irumporai 4 years ago
Report

படங்கள் வெளியாகும் போதும் சரி, அல்லது தான் எடுத்து செய்யும் நற்காரியங்களின் போதும் சரி எப்போதும் தன்னை சுற்றி அரசியல் சாயம் இல்லாமல் பார்த்துக்கொளபவர் நடிகர் அஜித் .

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு , வலிமை பட அப்டேட்-ற்காக காத்திருந்த அஜித் ரசிகர்களுக்கு கடந்த சில தினங்களுக்கு முன் வெளியான வலிமை பட ட்ரைலர் அவர்களின் காத்திருப்பை பூர்த்தி செய்தது.

போனி கபூர் ஜி ஸ்டூடியோஸ் தயாரிப்பில், ஹட்ச்.வினோத் இயக்கியிருக்கும் படத்தில் வில்லன் கதாபாத்திரம் ஏற்று கார்த்திக்கேயாவும், முக்கிய வேடத்தில் ஹுமா குரோஷியும் நடித்துள்ளனர். படத்தின் ட்ரைலரில் அஜித்தின் பைக் ஸ்டண்ட் காட்சிகள் அஜித் ரசிகர்களால் பெரிதும் கவரப்பட்டது.

இவ்வாறான நிலையில் மதுரை தூங்கநகரம் அஜித் ரசிகர்களால் மாநகரை சுற்றி ஒட்டியுள்ள போஸ்டர்கள் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

‘’ எங்களின் வலிமையைசட்டசபையும் அறியும்” -  தூங்கநகரம் அஜித் ரசிகர்கள் போஸ்டரால் சர்ச்சை | Ajith Poster Viral Phots Fans Madurai

தலைமை செயலகம் பின்னணியில் முதல்வர் நாற்காலியில் அஜித் அமர்ந்திருப்பது போன்ற படத்துடன், ”எங்களின் வலிமையை பட்டிதொட்டி தெரியும் சட்டசபையும் அறியும்” என்று எழுதப்பட்டுள்ள வாசகம் இடம் பிடித்துள்ளது.

எப்போதும் தன் மீது அரசியல் சாயம் பட்டு விடக்கூட்டாது என்பதில் கவனமக உள்ள அஜித் குமார்,  அரசியல் தலையீடு காரணமாக தனது ரசிகர் மன்றங்களை களைத்தார் . மேலும் தன்னை தல என்றும் கூப்பிடாதீர்கள் என்றும் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்த நிலையில் மதுரை தூங்கநகரம் அஜித் ரசிகர்களால் மதுரை மாநகரை சுற்றி ஒட்டியுள்ள போஸ்டர்கள் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.