இந்த விஷயங்கள் எல்லாம் 'ரஜினிகாந்திடம்' கற்றுக் கொண்டேன்; ஓப்பனாக சொன்ன அஜித் - என்ன தெரியுமா?
நடிகர் அஜித் நேர்காணல் ஒன்றில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குறித்து பேசியுள்ளார்.
நடிகர் அஜித்
கடந்த 1993ம் ஆண்டு வெளியான அமராவதி என்ற படத்தின் மூலம் தமிழ்த் திரை உலகில் அறிமுகமானவர் அஜித் குமார். இதுவரை 61 திரைப்படங்கள் நடித்திருக்கிறார். தற்போது இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.
இந்த படத்திற்கு விடா முயற்சி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. படத்திற்கான வேலைகளும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த விஜய் தொலைக்காட்சியில் நீயா நானா என்ற நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கோபிநாத் கடந்த 2007ம் ஆண்டு அஜித்திடம் நேர்காணல் ஒன்றை எடுத்திருந்தார்.
அந்த நேர்காணலில் பில்லா படம் குறித்த கேள்விகள் அஜித்திடம் கேட்கப்பட்டது. அதில் ரஜினிகாந்திடம் தனிப்பட்ட மனிதனாக உங்களுக்கு பிடித்த விஷயங்கள் என்ன? என்று கேள்வி கேட்கப்பட்டது
பேட்டி
அதற்கு பதிலளித்த அஜித் 'அவரிடம் இருந்து நிறைய விஷயங்களை கற்றுக் கொள்ளலாம். குறிப்பாக வெற்றியை எவ்வாறு கையாள்வது, ஏனெனில் இப்போதைய கால கட்டத்தில் வெற்றி என்பது தலைக்கேறிவிடுகிறது.
அதனால் இதுபோன்ற நிறைய விஷயங்களை ரஜினிகாந்திடம் இருந்து கற்றுக் கொள்ளலாம். மேலும் எப்படி மக்களிடம் பேச வேண்டும், பழக வேண்டும், பணிவாக இருக்க வேண்டும் போன்ற விஷயங்கள் எங்களுக்கு தெரியாமல் இருந்தது.
ஆனால் அவரை சந்தித்த பிறகு, அவரிடம் பேசிய பிறகு இதுபோன்ற நல்ல விஷயங்களை நான் கற்றுக்கொண்டேன் என்று நடிகர் அஜித் பேசியுள்ளார்.