அந்த நடிகைய ஒருதலையாக காதலித்த அஜித்..ஆனா அது ஹீரா இல்ல..!
நடிகர் அஜித் நடிகை ஒருவரை ஒருதலையாக காதலித்து வந்தார் என்றும், ஆனால் அது கைகூடாமல் போய்விட்டது என சினிமா விமர்சகர் பயில்வான் தெரிவித்துள்ளார்.
நடிகர் அஜித்
தமிழ் சினிமாவின் உச்சம் நடிகர் அஜித். கடைசியாக துணிவு படத்தில் நடித்திருந்த அஜித், அதன் வெற்றுக்கு வெற்றிக்கு பிறகு, நீண்ட இடைவேளைக்கு பிறகு தற்போது விரைவில் விடாமுயற்சி படத்தை துவங்கவுள்ளார்.
தனது தனிப்பட்ட வாழ்க்கைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் அஜித், ரசிகர் மன்றங்களை களைத்து, பொதுநிகழ்ச்சிகளில் இருந்து ஒதுங்கி, படத்துடன் மட்டுமே ரசிகர்களுடன் உரையாடி வருகின்றார். இருப்பினும், அஜித்திற்கென தனிப்பெரும் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது என்பதை சொல்லி தெரியவேண்டியதில்லை.
அஜித்தின் ஒருதலை காதல்
நடிகை ஷாலினியை காதலித்து பின்னர் திருமண செய்து கொண்ட அஜித்தின் ஒரு தலை காதல் விவகாரம் குறித்து சினிமா விமர்சகரும், நடிகருமான பயில்வான் ரங்கநாதன் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் அளித்த பேட்டியில், ஹீராவுடனான காதல் முறிந்த பிறகு அஜித் வேறு ஒரு நடிகை காதலித்தார் என கூறிய பயில்வான், அவர் 1996ஆம் ஆண்டு வெளியான வான்மதி படத்தின் கதாநாயகி சுவாதி தான் என கூறினார்.
ஆனால் அதுவும் அதுவும் ஒரு தலைக்காதல் தான் என குறிப்பிட்ட பயில்வான், ஒரு கட்டத்தில், திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்னும் நோக்கில் முறைப்படி, சுவாதியைப் பெண்கேட்டுச் அஜித் செல்ல அவரின் முயற்சிகள் அனைத்தும் பெண்வீட்டாரால் நிராகரிக்கப்பட்டன என்றும் அந்த பேட்டியில் கூறினார்.