உலகம் சுற்ற தயாராகும் அஜித் - இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்

Maral Yazarloo ActorAjith
By Petchi Avudaiappan Sep 21, 2021 01:15 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in சினிமா
Report

நடிகர் அஜித் உலகம் முழுவதும் பைக்கில் சுற்றிவர திட்டமிட்டிருப்பதாக அவரது பிஆர்ஓ சுரேஷ் சந்திரா ட்வீட் செய்துள்ளார்.

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள 'வலிமை' திரைப்படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து படமானது தீபாவளிக்கு திரைக்கு வர ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. சில வாரங்களுக்கு முன்பு ரஷ்யாவில் தன்னுடைய படப்பிடிப்பை முடித்த அஜித் அந்நாட்டில் பைக் பயணம் மேற்கொண்டார்.

ஊரடங்கு தளர்வுக்குப் பிறகு உலகளாவிய பைக் பயணம் குறித்து அஜித் பரிசீலித்து வந்ததாகவும், அதில் முதற்கட்ட பயணம் ரஷ்யாவில் தொடங்கியதாகவும் கூறப்பட்டது. தற்போது டெல்லி சென்றுள்ள நடிகர் அஜித் அங்கு தாஜ்மஹாலில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டது சமூகவலைதளங்களில் வைரலானது.

இதனைத் தொடர்ந்து டெல்லியில் உலகம் முழுவதும் பைக்கிலேயே சுற்றி வந்த சாகசப் பெண்மணியான மாரல் யாசர்லூவை நேரில் சந்தித்து அவருக்கு வாழ்த்துகளை அஜித் தெரிவித்துள்ளார். மேலும், எதிர்காலத்தில் பைக்கில் உலக பயணம் மேற்கொள்ள தேவையான ஆலோசனையும் கேட்டறிந்துள்ளார்.

இந்த சந்திப்பு குறித்த புகைப்படத்தையும், தகவலையும் நடிகர் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.இதுவரை 7 கண்டங்களையும், 64 நாடுகளையும் பைக்கிலேயே சுற்றிய மாரல் யாசர்லூ, 1 லட்சத்திற்கும் அதிகமான கிலோ மீட்டர் பயணம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் விரைவில் உலகம் சுற்றும் வாலிபனாக அஜித் வலம் வரவுள்ளது உறுதியாகியுள்ளது.