கனவில் இருந்த விக்னேஷ் சிவன்... சைலண்டாக கழட்டி விட்ட அஜித்... - வெளியான காரணம்.. - ரசிகர்கள் ஷாக்..!

Ajith Kumar Tamil Cinema Vignesh Shivan
By Nandhini Jan 30, 2023 04:07 PM GMT
Report

நடிகர் அஜீத்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜீத். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. ‘தல’ என்று இவரை ரசிகர்கள் அன்போடு அழைத்து வருகிறார்கள்.

துணிவு

சமீபத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி நடிகர் அஜித்தின் ’துணிவு’ படம் வெளியானது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் சாதனையையும் படைத்துள்ளது. 

ajith-kumar-vignesh-shivan-tamil-cinema

விக்கியை கழட்டிவிட்ட அஜித்

கடந்த சில நாட்களாக அஜித்தின் AK62 படத்தைப் பற்றிய சமூகவலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

துணிவு படத்திற்கு பிறகு, நடிகர் அஜித் அடுத்து விக்னேஷ் சிவனின் இயக்கத்தில் AK62 படத்தில் நடிப்பதாக தகவல் வெளியானது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது.

இந்த மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கப்பட இருந்த நிலையில், திடீரென AK62 படத்திலிருந்து விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. விக்னேஷ் சிவன் சொன்ன கதை அஜித்திற்கும் லைக்கா நிறுவனத்திற்கும் பிடிக்காமல் போனதாக சொல்லப்படுகிறது.

AK62 படத்தை விஷ்ணு வர்தன் அல்லது மகிழ் திருமேனி போன்ற இயக்குனர்களில் ஒருவர் தான் இயக்கப்போவதாக கூறப்படுகிறது. இதற்கு காரணம் என்னவென்றால், AK62 படத்தின் OTT உரிமையை NETFLIX நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது.

இதற்கான அறிவிப்பை அந்நிறுவனம் டுவிட்டரில் அதிகாரபூர்வமாக வெளியிட்டது. இந்த அறிவிப்பு போஸ்டருக்கு விக்னேஷ் சிவன் லைக் செய்திருக்கிறார்.

இந்நிலையில், இதைப் பார்த்த ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர். படக்குழுவே அதிகாரபூர்வமாக யார் இயக்குநர் என்று அறிவித்தால் தான் இந்த குழப்பம் தீரும் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.