கழட்டி விட்ட அஜித்..படமெடுத்து ஆடப்போகும் விக்னேஷ்சிவன்..வெளியான தகவல் - வாயடைத்த ரசிகர்கள்…!

Ajith Kumar Tamil Cinema Lyca Vignesh Shivan
By Nandhini Feb 22, 2023 02:39 PM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜீத். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. ‘தல’ என்று இவரை ரசிகர்கள் அன்போடு அழைத்து வருகிறார்கள்.

துணிவு

சமீபத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி நடிகர் அஜித்தின் ’துணிவு’ படம் வெளியானது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் சாதனையையும் படைத்துள்ளது.

விக்கியை கழட்டிவிட்ட அஜித்

கடந்த சில நாட்களாக அஜித்தின் AK62 படத்தைப் பற்றிய சமூகவலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. துணிவு படத்திற்கு பிறகு, நடிகர் அஜித் அடுத்து விக்னேஷ் சிவனின் இயக்கத்தில் AK62 படத்தில் நடிப்பதாக தகவல் வெளியானது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது.

இப்படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் துவங்கப்பட இருந்த நிலையில், திடீரென AK62 படத்திலிருந்து விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டதாக தகவல் வெளியானது. விக்னேஷ் சிவன் சொன்ன கதை அஜித்திற்கும் லைக்கா நிறுவனத்திற்கும் பிடிக்காமல் போனதாக சொல்லப்படுகிறது.

AK62 படத்தை விஷ்ணு வர்தன் அல்லது மகிழ் திருமேனி போன்ற இயக்குனர்களில் ஒருவர் தான் இயக்கப்போவதாக கூறப்படுகிறது. இதற்கு காரணம் என்னவென்றால், AK62 படத்தின் OTT உரிமையை NETFLIX நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது.

ajith-kumar-vignesh-shivan-lyca

விபூதி அடிக்க பார்த்த விக்னேஷ் சிவன்

அஜித்தை வைத்து படம் பண்ணப் போறேன் என்ற குஷியில் சமூக வலைதளங்களில் அஜித்துடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து வந்தார் விக்னேஷ் சிவன். ஆனால் அது நடக்காமல் போகவே பல பிரபலங்கள் அவருக்கு ஆறுதல்கள் கூறினர்.

இதனையடுத்து, விஜய்சேதுபதி தானாக வந்து நான் கால்ஷீட் தருகிறேன் என்று கூறியிருக்கிறாராம். இந்த படத்தில் இவர்கள் இருவரும் இணைந்தால் இப்படம் 3வது படமாக அமையும்.

எந்தக் கதையை அஜித் பிடிக்கவில்லை என்று சொன்னாரோ அந்த கதையில் தானாம் விஜய் சேதுபதிக்கு. ஆனால், முதன் முதலில் அக்கதை அஜித்துக்கு முன்னாடியே விக்னேஷ் சிவன் சிவகார்த்திகேயனிடம் கூறியிருக்கிறார்.

ஏதோ ஒரு காரணத்திற்காக சிவகார்த்திகேயனும் முடியாது என்று சொல்ல, அதன் பிறகே அஜித்திடம் சென்றுள்ளது. இப்போது அஜித்தும் வேண்டாம் என்று நிராகரிக்க, கடைசியாக விஜய்சேதுபதியிடம் வந்துள்ளது.

பலமான கூட்டணியில் விக்னேஷ் சிவன்

ஏகே 62 கை நழுவிப் போனதையடுத்து, எப்படியாவது ஒரு தரமான படத்தை கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் ஈடுபட்டுள்ளார் விக்னேஷ் சிவன். தன் கூட்டணியில் ஒரு புதிய மாற்றத்தை அவர் ஏற்படுத்தியுள்ளார்.

‘லவ் டுடே ’ படத்தின் இயக்குனரும் நடிகருமான பிரதீப் ரெங்கநாதனை தன் படத்தில் இணைத்துக் கொண்டுள்ளாராம். படத்தில் பிரதீப் ரெங்கநாதன் நடிக்கப் வைக்கப்போவதாக 90% பேச்சுவார்த்தைகள் நடந்து முடிந்துள்ளதாம். ஒரு பக்கம் விஜய்சேதுபதி, ஒரு பக்கம் பிரதீப் ரெங்க நாதன் என தன் பலத்தை அதிகப்படுத்த இருக்கிறார் விக்னேஷ்சிவன்.