“உங்க ஹெட்போன்ஸ்,ஸ்க்ரீனுடன் தயாரா இ்ருங்க..பெருங்கோபம் இன்னைக்கு தொடங்குது” - இன்று வெளியாகிறது வலிமை பட ட்ரெய்லர் ; படக்குழு அறிவிப்பு

announcement ajith kumar ak valimai update trailer release today
By Swetha Subash Dec 30, 2021 06:09 AM GMT
Report

வலிமை படத்தின் டிரைலர் வெளியீட்டு தேதி தற்போது உறுதியாகியுள்ளது.

அஜித் குமார் நடிப்பில் , எச்.வினோத் இயக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் உருவாகியிருக்கும் திரைப்படம் வலிமை.

போனி கபூர் தயாரித்து வழங்க, யுவன் ஷங்கர் ராஜா இசையில், ஹிந்தி நடிகை ஹீமா குரேஷி, நடிகர் கார்த்திகேயன், யோகி பாபு ஆகியோர் நடித்திருக்கும் இந்த திரைப்படம் வருகிற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ள சூழலில்,

படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் கடந்த இரண்டு நாட்களாக இணைய டிரெண்டிங்கில் கலக்கியது.

இந்த சூழலில் படத்தின் டிரெய்லரை எப்போதாம்பா வெளியிடுவீங்க என காத்திருந்த ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக படக்குழு தற்போது வெளியீட்டு தேதியினை அறிவித்துள்ளது.

சோனி மியூஸிக் சவுத் வெளியிட்டுள்ள அறிவிப்பில்

“உங்களது ஹெட்போன்ஸ் மற்றும் ஸ்க்ரீனுடன் தயாராக இ்ருங்கள்..பெருங்கோபம் இன்று மாலை 6.30 மணிக்கு தொடங்குகிறது “ என வலிமை படத்தின் டிரைலர் அப்டேட் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

படத்தின் அம்மா பாடல் மற்றும் விசில் தீம் உள்ளிட்டவைகள் சமீபத்தில் வெளியாகி அஜித் ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.

வலிமை படம் தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு படம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தை முடித்துவிட்டு மீண்டும் அஜித் தனது கால்ஷீட்டை இயக்குநர் எச். வினோத்துக்கே கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த படம் முழுக்க முழுக்க செண்டிமெண்ட் காட்சிகளுடன் உருவாக்கப்பட உள்ளது.