பெருமளவில் எதிர்பார்த்த ‘வலிமை’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு? - வெளியான தகவல் ; ரசிகர்கள் உற்சாகம்

Swetha Subash
in திரைப்படம்Report this article
நடிகர் அஜித் நடித்து ரசிகர்களால் பெரிதும் எதிர்ப்பார்க்கபடும் வலிமை படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.
தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவரான நடிகர் அஜித் குமார் நடித்து, எச். வினோத் இயக்கத்தில் திரைக்கு வர காத்திருக்கும் படம் வலிமை.
வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயா, முக்கிய காதாப்பத்திரத்தில் ஹுமா குரேஷி போன்ற பலர் நடித்துள்ள வலிமை படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
படத்தை பாலிவுட்டின் பிரபல தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்து வழங்குகிறார்.
அஜித்-வினோத்-போனி கபூர் கூட்டணியில் ஏற்கனவே 'நேர்கொண்ட பார்வை' படம் வெளியாகி வருமான ரீதியாகவும் விமர்சனம் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.
அதன் பிறகு இவர்கள் கூட்டணியில் வெளியாக இருக்கும் இந்த திரைப்படத்தை ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர்.
'வலிமை' படத்தின் பணிகள் முடிந்து பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் கொரோனா 3-ம் அலை காரணமாக ரிலீஸ் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், ‘வலிமை’ ரிலீஸ் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது.
அந்த தகவலின்படி வலிமை திரைப்படம் வருகின்ற பிப்ரவரி 24 -ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.
எனினும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.