ரசிகர் உயிரிழப்பு - ரூ.1 கோடி நஷ்ட ஈடு கேட்டு நடிகர் அஜீத் மீது போலீசில் புகார்...!
நடிகர் அஜீத்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜீத். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. ‘தல’ என்று இவரை ரசிகர்கள் அன்போடு அழைத்து வருகிறார்கள்.
துணிவு படம்
நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களை தொடர்ந்து எச். வினோத் இயக்கத்தில் மீண்டும் நடிகர் அஜீத் நடித்துள்ள படம் துணிவு. இப்படத்தில் அஜீத்திற்கு ஜோடியாக மஞ்சுவாரியர் நடித்துள்ளார். இப்படம் தற்போது வெளியாகி மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு பெற்றுள்ளது. இப்படத்தின் வெற்றியை அஜீத் ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வருகிறார்கள்.
ரசிகர் உயிரிழப்பு
அஜீத்தின் ‘துணிவு’ படம் நேற்று முன்தினம் திரையரங்குகளில் வெளியானது. சென்னையில் உள்ள ரோகிணி திரையரங்கத்தில் துணிவு படம் பார்க்க சென்ற 19 வயது இளைஞர் பரத் என்பவர் அங்கு சென்ற டேங்கர் லாரி மீது ஏறி நடனமாடியபோது, தவறி விழுந்து உயிரிழந்தார். மாணவர் உயிரிழந்த விவகாரம் ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சி அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
அஜீத் மீது போலீசில் புகார்
இந்நிலையில், ரோகிணி திரையங்கில் துணிவு படத்தை பார்க்க சென்ற மாணவர் பரத் மரணத்திற்கு நடிகர் அஜீத் மற்றும் ரெட் ஜெயண்ட் குழுவினர் தலா ரூ.1 கோடி தர வேண்டும் என்று சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு இணையதளம் வழியாக சமூக ஆர்வலர் ஆர்.டி.ஐ. செல்வம் என்பவர் புகார் கொடுத்துள்ளார்.