வலியால் துடிதுடித்த அஜித்... - அவர் உடலில் எத்தனை அறுவை சிகிச்சைன்னு தெரியுமா...? - ஷாக்கான ரசிகர்கள்...!
வலியால் துடிதுடித்த அஜித் உடலில் எத்தனை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ள தகவல் வெளியாகி ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் அஜித்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜீத். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. ‘தல’ என்று இவரை ரசிகர்கள் அன்போடு அழைத்து வருகிறார்கள். தமிழ் சினிமாவில் போராடி முன்னுக்கு வந்தவர் அஜித்.
இவர் 10ம் வகுப்புக்கு மேல் படிக்கவே இல்லை. இதனையடுத்து, டெக்ஸ்டைல் தொழிலில் நுழைந்தவர். நண்பர்கள் வற்புறுத்தியதால் மாடலிங்கில் நுழைந்தார். இதனையடுத்து தமிழ் சினிமாவில் ‘அமராவதி’ படம் மூலம் அறிமுகமானார்.
இதனையடுத்து பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். பைக் மற்றும் கார் ஓட்டுவதில் நடிகர் அஜித் அதிக ஆர்வம் கொண்டவர். பல ரேஸ்களிலும் கலந்து கொண்டுள்ளார்.
துணிவு சமீபத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி நடிகர் அஜித்தின் ’துணிவு’ படம் வெளியானது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் சாதனையையும் படைத்துள்ளது.
வலியால் துடிதுடித்த அஜித்
இந்நிலையில், பிரபல இயக்குநரும், நடிகருமன சுந்தர்.சி ஒரு சேனலுக்கு பேட்டி கொடுத்தார்.
அப்போது அவர் பேசுகையில்,
சில வருடங்களுக்கு முன் சினிமாவில் நடிப்பதையே நிறுத்த அஜித் முடிவு செய்தார். அதை அவருக்கு நெருக்கமான பலரிடமும் பகிர்ந்து கொண்டார்.
என் இயக்கத்தில் ‘உன்னைத் தேடி’ படத்தில் அஜித் நடித்தார். அப்போது, அவர் பைக் ரேஸில் கலந்து கொண்டு அடிபட்டதால் முதுகுவலியில் ரொம்ப அவதிப்பட்டார். எனவே, சினிமாவிலிருந்து விலக முடிவெடுத்திருக்கிறேன் சார் என்று என்னிடம் கூறினார்.
இதைக் கேட்டதும் நான் அதிர்ச்சி அடைந்தேன். ஆனால், அஜித்... உங்களை எல்லோருக்கும் பிடித்திருக்கிறது. எனவே, நீங்கள் சினிமாவில் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்று சொன்னேன் என்றார்.
அஜித் உடலில் கிட்டதட்ட 34 அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளது. இதனால், படப்பிடிப்பு தளத்தில் அவர் நடிக்கும்போது கடுமையான முதுகுவலி ஏற்படும். ஆனாலும், வலிகளை பொறுத்துக்கொண்டு அவர் ரசிகர்களுக்காக கடந்த 20 வருடங்களாக திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
தற்போது இது தொடர்பான தகவல் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த அவரது ரசிகர்கள் சோகத்தில் கமெண்ட் செய்து வருகின்றனர்.