இணையத்தில் டிரெண்டாகும் நடிகர் அஜித் குமாரின் லேட்டஸ்ட் புகைப்படம் - ரசிகர்கள் கொண்டாட்டம்
தமிழ் திரையுலகில் உச்ச நடிகராக வலம் வரும் நடிகர் அஜித்குமார் தற்போது தனது 61-வது படத்தில் நடித்து வருகிறார்.
நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களை தொடர்ந்து இந்த படத்தில் அஜித் மீண்டும் இயக்குனர் எச்.வினோத்- போனி கபூர் கூட்டணியுடன் இணைந்திருக்கிறார்.
இதற்கான படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. வங்கியில் நடைபெறும் கொல்லையை கதையின் மையமாக வைத்து AK-61 படம் உருவாகி வருவதாக சொல்லப்படுகிறது.
மேலும், படத்தில் மஞ்சு வாரியர், ஜான் கோக்கன், சமுத்திரக்கனி , வீரா போன்ற பிரபல நடிகர்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால் இது குறித்த எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை.
இந்நிலையில், அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அந்த வகையில், தற்போது அஜித் கெத்தான லுக்கில் இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படத்தில் அவருடன் நடிகர் ஆதியும் உள்ளார்.