'ஏகே 62' படத்தில் இருந்து விலகிய விக்னேஷ் சிவன் - அடுத்து என்ன படம்?

Ajith Kumar Tamil Cinema Vignesh Shivan
By Sumathi Feb 04, 2023 08:31 AM GMT
Report

'ஏகே 62' படத்தில் இருந்து விலகியதை விக்னேஷ் சிவன் விலகியது உறுதி செய்யப்பட்டது.

ஏகே 62

அஜித் நடிப்பில், விக்னேஷ் சிவன் இயக்கத்தில், லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் அனிருத் இசையில் ’ஏகே 62’ என்ற படம் உருவாக இருப்பதாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

ஆனால் விக்னேஷ் சிவன் கூறிய கதை அஜித்துக்கு திருப்தி அளிக்கவில்லை என்று கூறப்பட்டதால் விக்னேஷ் சிவன் இந்த படத்திலிருந்து விலகி விட்டதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் தான் இயக்கிய படங்களின் பட்டியலையை பதிவு செய்திருந்த நிலையில் அதில் ’ஏகே 62’ படத்தை நீக்கிவிட்டார்.

விக்னேஷ் சிவன் விலகல்

இதனையடுத்து அவர் இந்த படத்திலிருந்து விலகிவிட்டார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர் தனது அடுத்த படத்தை ’விக்கி 6’ என்று பதிவு செய்துள்ள நிலையில், அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

’ஏகே 62’ படத்தை இயக்குனர் மகிழ்திருமேனி இயக்க அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.