பரவாயில்லமா, எனக்கும் 2 குழந்தை இருக்காங்க : 10 மாத குழந்தையின் தாயை நெகிழ வைத்துள்ள அஜித்
அஜித் மிகவும் எளிமையான மனிதர் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. தன்னுடன் பணியாற்றும் நபர்களுக்கு கூட சரிக்கு சமமான மரியாதையை வழங்கக் கூடியவர். அதே போல ரசிகர்ளை கூட சார், மேடம் என்று மரியாதையுடனே தான் அழைப்பார்.
இப்படி ஒரு நிலையில் அஜித்தின் நல்ல குணத்திற்கு சான்றாக சமீபத்தில் விமான நிலையம் ஒன்றில் நடந்த சம்பவம் குறித்து இன்ஸ்ட்டா ஒருவர் பதிவிட்டுள்ளார்.
அஜித் செயல்
அஜித் அஜித்தின் தந்தை கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தான் காலமானார். மேலும் தனது தந்தையின் இறுதி சடங்கை கூட யாருக்கும் தொந்தரவு இல்லாமல் மிகவும் எளிமையாக நடத்தி முடித்தார் அஜித். தந்தையின் இறப்பின் சோகத்தில் இருந்தாலும் அஜித் தன்னுடைய பணிகளை தொடர்ந்து செய்து வருகிறார் அஜித். அந்த வகையில் சமீபத்தில் நடிகர் அஜித் விமான நிலையத்திற்கு சென்றிருந்தார்.
நெகிழும் இணையவாசிகள்
அந்த பதிவில் என்னுடைய மனைவி கிளாஸ்கோவில் இருந்து சென்னைக்கு திரும்பினார். அவர் எங்களுடைய 10 மாத குழந்தையுடன் தனியாகத்தான் பயணித்தார். அப்போது லண்டன் விமான நிலையத்தில் அஜித்தை சந்திக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. மேலும், என்னுடைய மனைவி ஒரு டிராவலிங் சூட்கேஸ் மற்றும் குழந்தையை எடுத்துச் செல்லும் பை ஆகியவற்றுடன் தான் பயணித்தார். அந்த பதிவில் என்னுடைய மனைவி கிளாஸ்கோவில் இருந்து சென்னைக்கு திரும்பினார். அவர் எங்களுடைய 10 மாத குழந்தையுடன் தனியாகத்தான் பயணித்தார்.
அப்போது லண்டன் விமான நிலையத்தில் அஜித்தை சந்திக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. மேலும், என்னுடைய மனைவி ஒரு டிராவலிங் சூட்கேஸ் மற்றும் குழந்தையை எடுத்துச் செல்லும் பை ஆகியவற்றுடன் தான் பயணித்தார். பின்னர் விமானத்தில் இருந்த பணியாளர்கள் அந்த சூட்கேஸை என் மனைவியின் இருக்கைக்கு அருகில் பத்திரமாக வைக்கும் வரை கூடவே இருந்தார்.
Fan about Ajith sir, today's pic.
— Ajith | Dark Devil (@ajithFC) April 14, 2023
Pic: Karthik | #Ak #Ajith #AjithKumar | #Thunivu | #AK62 | #RIDEformutualrespect | pic.twitter.com/EvBEVfxY0Z
அவர் உடன் பயணித்த ஒருவர் ‘தலைவா நீங்க எதுக்கு, நான் கொண்டு வரேன்’ என்று கூற, அதற்கு அவர் பரவாயில்லை என்று சொல்லிவிட்டார். விமானத்திலிருந்து பேருந்து சென்ற போது கூட என் மனைவி ‘சூட்கேசை நான் எடுத்து வருகிறேன்’ என்று அவரிடம் கேட்டபோது கூட அவர் அதனை மறுத்துவிட்டார். இப்படிப்பட்ட ஒரு மனிதர் இது போல எல்லாம் செய்வதைக் கண்டு நான் மிகவும் நெகிழ்ச்சி அடைந்து விட்டேன். அவரின் இந்த குணத்தைப் பார்த்து வியந்துவிட்டேன்’ என்று பதிவிட்டுள்ளார்.