விஜய் -தோனி சந்திப்பால் கடுப்பான அஜித் ரசிகர்கள்: என்ன செய்தார்கள் தெரியுமா?
நடிகர் விஜய், சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி ஆகியோர் சந்தித்துக் கொண்ட புகைப்படங்கள் வைரலான நிலையில் அஜித் ரசிகர்கள் இணையத்தில் கொந்தளித்து வருகின்றனர்.
நடிகர் விஜய் தற்போது இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு சென்னையில் உள்ள கோகுலம் ஸ்டூடியோவில் நடைபெற்று வருகிறது.
இதே ஸ்டூடியோவில் வேறொரு தளத்தில் சென்னை அணி கேப்டன் தோனி நடிக்கும் விளம்பர பட ஷூட்டிங் நடைபெற்றது.
அப்போது இருவரும் சந்தித்து உரையாடிய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது.பலரும் தல - தளபதி இணைந்தனர் என கொண்டாடி தீர்த்தனர்.
இந்நிலையில் இந்த புகைப்படங்களை கண்ட அஜித் ரசிகர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் விழிபிதுங்கினர். உடனடியாக போட்டிக்கு #ஒரேதலஅஜித் என்ற ஹேஸ்டேக் இணையத்தில் ட்ரெண்டானது. சிலர் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் அஜித் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து “Real Thala with Real Thalapathy” என பதிவிட்டு தங்களின் ஏக்கங்களை போக்கி கொண்டுள்ளனர்.
Real Thala with Real Thalapathy #Valimai #ஒரேதலஅஜித் pic.twitter.com/So6oYqPbHL
— Mʌŋɩĸʌŋɗʌŋ ᵀʰᵃˡᵃ Rasigan (@manikandan23686) August 12, 2021