நண்பருடன் வாரணாசியில் சுற்றித்திரிந்த அஜித்: இணையத்தில் வைரலான புகைப்படம்
தல அஜீத் தனது நண்பருடன் வாரணாசி தெருக்களில் சுற்றும் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. எச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிக்கும் படம் வலிமை. இதில் அஜீத்குமார் காவல்துறை அதிகாரியாக நடித்து வருகிறார். யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு கொரானாவால் தடைப்பட்டிருந்தது.
தற்போதுஊரடங்கு தளர்வால் மீண்டும் தொடங்கப்பட்டு ரமோஜிராவ் பிலிம் சிட்டியில் படப்பிடிப்புநடைபெற்று வந்ததது. அப்போது அஜீத்தின் பைக் சேசிங் காட்சிகள் படமாக்கப்பட்டபோது அஜீத்துக்கு காயம் ஏற்பட்டது. இதனால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இந்நிலையில் நடிகர் அஜீத், தனது நண்பருடன் வாரணாசி சென்றுள்ளார்.
அங்கு காசி விஸ்வநாதர் கோயிலிலில் தரிசனம் செய்துள்ளார். பின்னர் வாரணாசி பகுதிகளை நண்பருடன் சுற்றிப் பார்த்த அவர், தெருக்கடையில் அமர்ந்து உணவருந்திருக்கிறார். மேலும் ரசிகர்கள் அடையாளம் காணாதவகையில் தொப்பி, மாஸ்க் அணிந்திருந்தார் தல அஜீத். இந்த படம் தற்போது இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.