ரசிகர்களின் செயல் என்னை வருத்தமடையச் செய்துள்ளது: நடிகர் அஜித் அறிக்கை
நடிகர் அஜித் தற்போது இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார். கொரோனா முடக்கத்தல் இதன் படப்பிடிப்பு முடிவதற்கு தாமதமானது. அஜித்தின் ரசிகர்கள் வலிமை தொடர்பான அப்டேட்டை வழங்க வேண்டும் எனத் தொடர்ந்து வேண்டி வந்தனர். அதனை தொடர்ந்து தற்போது இப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளியாகும் என இன்று அறிவித்துள்ளார்.
இந்நிலையில் தற்போது தல அஜித் தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுக்கும் வகையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். ரசிகர்கள் வலிமை படத்தின் அப்டேட்டை கேட்டு அரசு, அரசியல், விளையாட்டு மற்றும் பல்வேறு இடங்களில் ரசிகர்கள் செய்யும் செயல்கள் அவரை வருந்த செய்வதாகவும், ரசிகர்கள் பொது வெளியிலும், இணையத்திலும் கண்ணியம் கட்டுப்பாட்டையும் கடைபிடிக்க வேண்டும் என கேட்டு கொண்டுள்ளார்.