விஜய்யின் பீஸ்ட் படம் பார்க்க வந்த அஜித் குடும்பத்தினர் - யாரெல்லாம் வந்தாங்க தெரியுமா?
நடிகர் விஜய் நடித்துள்ள பீஸ்ட் படத்தை நடிகர் அஜித்தின் குடும்பத்தினர் கண்டுகளித்த சம்பவம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் விஜய், நடிகை பூஜா ஹெக்டே,, இயக்குநர் செல்வராகவன் உட்பல பலரும் நடித்துள்ள படம் “பீஸ்ட்”. நெல்சன் இயக்கியுள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். கடந்த ஏப்ரல் 13 ஆம் தேதி வெளியான பீஸ்ட் படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
#ShaliniAjith & #AnoushkaAjith watched #Beast Today From Sathyam ❤️ pic.twitter.com/t2vI9sIpza
— Vijay Fans Trends (@VijayFansTreds) April 16, 2022
ஆனால் படம் வசூலில் பல சாதனைகளை படைத்த நிலையில் விஜய் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். இதனிடையே பீஸ்ட் படம் பார்த்த பிரபலங்கள் அதுகுறித்த கருத்தினை பகிராமல் உள்ள நிலையில் திரையுலகில் எதிரெதிர் துருவமாக கருதப்படும் விஜய் - அஜித் ரசிகர்கள் ஆச்சரியப்படும் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
அதாவது பீஸ்ட் படத்தை அஜித்தின் மனைவியும், நடிகையுமான ஷாலினியும்,மகள் அனோஷ்காவும் சென்னை சத்யம் திரையரங்கில் பார்த்துள்ளனர். அனோஷ்கா, விஜய்யின் தீவிர ரசிகையாம். அதனால் தான் தியேட்டருக்கே போய் படத்தை பார்த்துள்ளாராம். அஜித் தனது 61வது படப்பிடிப்புக்காக ஹைதராபாத்தில் உள்ள நிலையில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
சமூக வலைத்தளங்களில் விஜய், அஜித் ரசிகர்கள் மோதிக் கொள்வது காலம் காலமாக நடைபெற்று வருகிறது. ஆனால் அவர்கள் இருவரும் திரையுலகிற்கு பின்னான வாழ்க்கையில் நட்புடன் தான் இருக்கிறார்கள் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணம் ஆகி உள்ளது குறிப்பிடத்தக்கது.