அஜித்துக்கு இவ்வளவு பெரிய குழந்தைகளா? - முதல் முறையாக வெளியான குடும்ப புகைப்படம்
நடிகர் அஜித்தின் குடும்ப புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் தல என ரசிகர்களால் அன்பாக அழைக்கப்படும் நடிகர் அஜித் நடிப்பில் கடந்த வாரம் வெளியான வலிமை திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில் வசூலில் பல சாதனைப் படைத்தது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இதனிடையே அமர்க்களம் படத்தில் இணைந்து நடித்தபோது நடிகர் ஷாலினியுடன் ஏற்பட்ட காதல் திருமணத்தில் முடிந்த நிலையில் இவர்களுக்கு அனோஷ்கா, ஆத்விக் ஆகிய இரு குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் ஆத்விக் அஜித் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு அஜித் ரசிகர்கள் ட்விட்டரில் ஹேஸ்டேக் ட்ரெண்ட் செய்து அதன்மூலம் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் அஜித் தனது மனைவி ஷாலினி மற்றும் மகன், மகள் ஆகியோருடன் இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.