“ஓரமா போடா வெளக்கெண்ண”... - கொலை மிரட்டல் விடுத்த அஜித் ரசிகனுக்கு ப்ளூ சட்டை மாறன் பதிலடி

Ajith Kumar
By Nandhini Jun 18, 2022 12:59 PM GMT
Report

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களை பாரபட்சம் பார்க்காமல் விமர்சிப்பவர் ப்ளூ சட்டை மாறன்.

இவர் சமீபத்தில் இவர் ‘ஆன்டி இண்டியன்’ என்ற படத்தை இயக்கினார். இப்படத்தை பார்த்த பாரதிராஜா இவர் வெகுவாக பாராட்டினார். இதனையடுத்து, மீண்டும் முன்னணி நடிகர்களை விமர்சித்து வந்ததால் இவருக்கு மிரட்டல்களும், எதிர்ப்புகளும் தொடர்ந்து வந்துக்கொண்டிருக்கிறது.

இவ்வாண்டில் வெளியான நடிகர் அஜித்தின் ‘வலிமை’ படத்தை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார் ப்ளூ சாட்டை மாறன். அப்படத்தில் நடிகர் அஜித்தின் தோற்றத்தையும், அவர் நடனத்தையும் கிண்டலடித்து பேசியிருந்தார். இந்தப் பேச்சு அஜித்தின் ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. சினிமா பிரபலங்களும் இவரது பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தனர்.

“ஓரமா போடா வெளக்கெண்ண”... - கொலை மிரட்டல் விடுத்த அஜித் ரசிகனுக்கு ப்ளூ சட்டை மாறன் பதிலடி | Ajith Elamaran

ப்ளூ சட்டை மாறன் பதிலடி 

இந்நிலையில், இன்று டுவிட்டர் வாயிலாக கொலை மிரட்டல் விடுத்த அஜித் ரசிகருக்கு ப்ளூ சட்டை மாறன் பதிலடி கொடுத்திருக்கிறார்.

டுவிட்டரில் அஜித் ரசிகர் ஒருவர், “நீ யார என்ன வேணாலும் பண்ணீட்டு போ. தலய பத்தி தப்பா பேசுனா உடம்புல தல இருக்காது” என மிரட்டி பதிவிட்டிருந்தார்.

இதற்கு பதிலளித்து ப்ளூ சட்டை மாறன் டுவிட் செய்திருந்தார். அதில், “ஓரமா போடா வெளக்கெண்ண” என்று பதிவிட்டு பதிலடி கொடுத்திருக்கிறார். தற்போது இந்த பதிவு சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.