தனது ரசிகர்களுக்கு ஒரே நாளில் இரட்டை விருந்து படைக்கவுள்ள தல அஜித்

ajith movie valimai thala
By Jon Apr 11, 2021 05:41 PM GMT
Report

தனது ரசிகர்களுக்கு ஒரே நாளில் தல அஜித் இரட்டை விருந்து அளிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளன. அஜித் நடிப்பில் ஹெச் வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் வலிமை. தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இந்த படத்தில் நடிகர் அஜித்திற்கு ஜோடியாக நடிகை ஹுமா குரேஷி நடித்துள்ளார்.

வலிமை படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் வருகின்ற மே 1ஆம் தேதி அஜித் பிறந்த நாளை முன்னிட்டு வெளியாகும் என்று தயாரிப்பாளர் போனி கபூர் கடந்த மாதம் தெரிவித்திருந்தார். இதனால் அஜித் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்புடன் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில் தற்போது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டருடன், மோஷன் போஸ்டரையும் மே 1 ஆம் தேதி படக்குழுவினர் வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  


Gallery