அந்த ‘Moon Walk’ நடனத்தை அஜீத் சாரே ஆசைப்பட்டு ஆடினார்... - இயக்குநர் ஹெச்.வினோத் பேட்டி...!

Ajith Kumar Thunivu
By Nandhini Jan 13, 2023 08:56 AM GMT
Report

‘துணிவு ’ படத்தில் இடம் பெற்ற ‘Moon Walk’ நடனத்தை அஜீத் சாரே ஆசைப்பட்டு ஆடினார் என்று அப்படத்தின் இயக்குநர் ஹெச்.வினோத் தெரிவித்துள்ளார்.

நடிகர் அஜீத்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜீத். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. ‘தல’ என்று இவரை ரசிகர்கள் அன்போடு அழைத்து வருகிறார்கள்.

துணிவு

நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களை தொடர்ந்து எச். வினோத் இயக்கத்தில் மீண்டும் நடிகர் அஜீத் நடித்துள்ள படம் துணிவு. இப்படத்தில் அஜீத்திற்கு ஜோடியாக மஞ்சுவாரியர் நடித்துள்ளார். இப்படம் தற்போது வெளியாகி மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு பெற்றுள்ளது. இப்படத்தின் வெற்றியை அஜீத் ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வருகிறார்கள்.

ajith-danced-moon-walk-thunivu

அஜீத்தின் Moon walk

இந்நிலையில், இப்படத்தை குறித்து இயக்குநரான ஹெச்.வினோத் பேட்டி ஒன்றில் பேசுகையில், ‘துணிவு’ படத்தின் முதல் பாதியில் வரும் நடனத்தில் சிலது அஜித் சாரே ஆடியது. மைக்கேல் ஜாக்சன் ‘Moon Walk’ நடனத்தை நானும், கல்யாண் மாஸ்டரும் கேட்காமலே அஜித் சார், அவராகவே ஆசைப்பட்டு ஆடினார் என்று தெரிவித்துள்ளார்.