கார் விபத்தில் சிக்கிய அஜித் - பதற வைக்கும் வீடியோ

Ajith Kumar Dubai Accident
By Karthikraja Jan 07, 2025 12:19 PM GMT
Report

கார் ரேஸ் பயிற்சியின் போது நடிகர் அஜித் விபத்தில் சிக்கியுள்ளார்.

அஜித் குமார்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித் குமார். சினிமா துறையை தாண்டி கார் ரேஸ், பைக் பயணம், ட்ரோன் தயாரிப்பு, புகைப்படம் எடுத்தல் என பல விஷயங்களில் ஆர்வமுடையவர். 

ajith car accident

சமீபத்தில் கார் ரேசிங் அணியை தொடங்கிய அஜித்குமார் துபாயில் நடைபெற்ற உள்ள கார் பந்தயத்தில் கலந்து கொள்ள உள்ளார்.

கார் விபத்து

இந்நிலையில் இந்த போட்டிக்காக பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது அஜித்குமார் பயணித்த கார் விபத்தில் சிக்கியுள்ளது. கார் சேதமடைந்துள்ள நிலையில், நல்வாய்ப்பாக அஜித் காயமின்றி தப்பியுள்ளதாக கூறப்படுகிறது. 

அஜித் ஒட்டிய கார் விபத்தில் சிக்கிய வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.