வாக்களிக்க மனைவியுடன் வந்த அஜித்: ரசிகர்களுக்கு அட்வைஸ்
இன்று நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலில் வாக்களிப்பதற்காக மனைவியுடன் வரிசையில் காத்திருக்கும் அஜித்தின் புகைப்படம் வெளியாகியுள்ளது. தமிழக சட்டமன்றத்தின் 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமான இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெறுகிறது.
234 தொகுதிகளிலும் 3585 ஆண்கள், 411 பெண்கள், மூன்றாம் பாலினம் இரண்டு பேர் என மொத்தம் 3998 பேர் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் நடிகர் அஜித் வாக்களிப்பதற்காக மனைவி ஷாலினியுடன் சென்னை திருவான்மியூர் வாக்குச்சாவடிக்கு வருகை தந்தார்.
தன்னை காண கூட்டம் கூடிய போது, ரசிகர்களை வெளியே செல்லுமாறு அறிவுறுத்திய அஜித், ரசிகர்கள் செல்பி எடுக்க முற்பட்ட போது தவிர்த்துக் கொண்டார். வாக்குபதிவு தொடங்கும் முன்னரே நடிகர் அஜித், மனைவியுடன் வந்து காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.