தல தல தான்டா - அஜித், போனி கபூரின் ரஷ்யா சந்திப்பு: வைரலாகும் புகைப்படம்!
அஜித் மற்றும் போனிகபூர் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகர் அஜித், எச். வினோத் இயக்கத்தில் 'வலிமை' படத்தில் நடித்துள்ளார். போனி கபூர் இந்த படத்தை தயாரித்துள்ளார்.
நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து, இந்தக் கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்துள்ளது. இதில் பாலிவுட் நடிகை ஹுமா குரேஷி படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். வலிமை படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழுவினர் ரஷ்யா சென்றிருந்தனர்.
வலிமை படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிக்கப்பட்டுள்ளது. அதையடுத்து அஜித்தைத் தவிர ஏனைய படக்குழுவினர் சென்னை திரும்பியுள்ளனர். நடிகர் அஜித், பைக்கிலேயே ரஷ்யாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார்.
சில தினங்களுக்கு முன்பு அஜித் ரஷ்யாவின் பல பகுதிகளுக்கு சுற்றுப்பயணம் சென்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின. அவர் அங்கு கிட்டத்தட்ட 5000 கிலோமீட்டர் பயணம் செய்தார்.
தற்போது அஜித் மற்றும் போனி கபூர் இருவரும் ரஷ்யாவில் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தக் கூட்டணி மூன்றாவதாகவும் புதிய படத்தில் இணைந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
அந்தப் படத்தையும் எச். வினோத் தான் இயக்க உள்ளார் என்றும் கூறப்படுகிறது. விரைவில் அந்தப் படம் குறித்த அறிவிப்பும் வலிமை படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.