அஜித்துடன் இமயமலைக்கு பைக் ட்ரிப் சென்ற அதிமுக கவுன்சிலர் ? - வைரலாகும் புகைப்படம்
நடிகர் அஜித்தின் பைக் பயணத்தின் போது , அவருடன் அதிமுக கவுன்சிலர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.
பைக் அஜித்
பைக்கின் மீது அலாதி பிரியம் கொண்டவர் நடிகர் அஜித். ஏதேனும் ஓய்வு நேரம் கிடைத்தால் உடனே பைக்கை எடுத்துக் கொண்டு எங்காவது ட்ரிப் கிளம்பி விடுவார்.
அதிமுக கவுன்சிலர்
கடந்த சில வாரங்களுக்கு முன்பு அஜீத் லண்டனுக்கு சென்று அங்கு தனது நண்பர்களுடன் பைக்கில் சென்ற காட்சி இணையத்தில் வைரலான நிலையில்; நடிகர் அஜித்தின் இமயமலை பைக் ட்ரிப்பில் அவருடன் அதிமுக கவுன்சிலர் ஒருவரும் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
பொள்ளாச்சி நகராட்சியின் 8-வது வார்டு கவுன்சிலரான வசந்த் என்பவர் தான் தற்போது அஜித் உடன் பைக் ட்ரிப் சென்றுள்ளாராம்.
இவர் அஜித்தின் நெருங்கிய நண்பர் என்றும், அவரைப் போல் பைக் ரைடிங் மீது ஆர்வம் கொண்டவர் என்றும் கூறப்படுகிறது. தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.