சாரி பாவனா - ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த செயல் - மன்னிப்பு கேட்ட அஜித்..! வைரல் வீடியோ..!

Ajith Kumar Bhavana
By Karthick Dec 25, 2023 06:02 AM GMT
Report

 நடிகர் அஜித் குமார் தரிப்பது விடாமுயற்சி படப்பிடிப்பில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றார்.

அஜித்

தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக இருப்பவர் அஜித். துணிவு படத்தின் வெற்றி பிறகு பெரிய கேப் எடுத்துக் கொண்ட அவர் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகின்றார்.

ajith-asking-sorry-to-actress-bhavana-in-shooting

அர்ஜுன், திரிஷா என பலர் நடித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு அசர்பைஜான் நாட்டில் தீவிரமாக நடந்து வருகின்றது. படத்திற்கு அனிருத் இசையமைக்க, லைகா தயாரித்து வருகின்றது.

சாரி கேட்ட அஜித்

படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தளத்தில் நடிகை பாவனா நடிகர் அஜித்தை சந்தித்து இருக்கிறார். படப்பிடிப்பு தளத்தில் நடிகர் அஜித் படக்குழுவினருடன் பேசிக்கொண்டிருந்த நேரத்தில் பாவனா அங்கு வர, உடனே அஜித், கொஞ்சம் லேட்டாகி விட்டது என்று மன்னிப்பு கேட்டார்.

ajith-asking-sorry-to-actress-bhavana-in-shooting

அதற்கு பாவனா, நீங்கள் லேட்டாக வருவீர்கள் என்று சொன்னதால் தானும் லேட்டாக வந்தேன் என்று பதிலளிக்கிறார்.

இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது.