செல்போனை கொடுத்து ரசிகரிடம் மன்னிப்பு கேட்ட அஜீத்: வைரலாகும் வீடியோ

ajith election vijay vote
By Jon Apr 06, 2021 11:24 AM GMT
Report

தமிழகத்தில் இன்று சட்டமன்ற தேர்தல் காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழக மக்கள் அனைவரும் மிகவும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகிறார்கள். இன்று காலை முதல் அரசியல் பிரபலங்களும், சினிமா பிரபலங்களும் தங்கள் வாக்கை பதிவு செய்து வருகிறார்கள். நடிகர் அஜித், நடிகர் ரஜினிகாந்த், நடிகர் விஜய், நடிகர் சூர்யா ,கார்த்தி, நடிகை குஷ்பு உள்ளிட்ட பலரும் தங்கள் வாக்களித்து தங்கள் கட்சி ஜனநாயக கடமையை நிறைவேற்றி இருக்கிறார்கள்.

குறிப்பாக நடிகர் அஜித் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு நடக்கும் முன்பே திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடிக்கு தனது மனைவி ஷாலினியுடன் வருகை தந்தார். அப்போது அவரைக் ரசிகர்கள் சூழ்ந்தனர்.

இதையடுத்து போலீஸ் பாதுகாப்புடன் நடிகர் அஜித் தனது வாக்கினை அளித்து விட்டு அங்கிருந்து சென்றார். இதனிடையே தன்னுடன் செல்பி எடுக்க முயற்சி செய்த ரசிகர் ஒருவரின் செல்போனை அஜித் பிடுங்குவது போன்ற வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இது குறித்து பலரும் பலவிதமான கருத்துக்களை சமூகவலைத்தளத்தில் தெரிவித்து வருகிறார்கள்.

 

அதற்கு விளக்கமளிக்கும் வகையில் மற்றொரு வீடியோவும் சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது. அதில் தன் செல்போனை பிடிங்கிய நபரிடம் சென்று பேசும் அஜித், கொரோனா காலத்தில் நீங்கள் மாஸ்க் அணியாமல் வந்துள்ளீர்கள் என்று கூறியதுடன் , அவரிடம் மன்னிப்பு கேட்டு விட்டு சென்றுள்ளார். கொரோனா பேரிடர் காலத்தில் அனைவரின் பாதுகாப்பு கருதி அஜித் அவ்வாறு நடந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.