ட்விட்டரில் மோதிக்கொள்ளும் விஜய் - அஜித் ரசிகர்கள்...
நடிகர்கள் விஜய் மற்றும் அஜீத் ரசிகர்கள் சமூக வலைதளமான டுவிட்டரில் வார்த்தை மோதலில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக திகழும் நடிகர்கள் விஜய் மற்றும் அஜித்திற்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். சினிமாவில் எதிரெதிர் துருவமாக திகழ்ந்தாலும் நிஜ வாழ்க்கையில் இருவரும் நண்பர்கள்தான் என்பதை பல இடங்களில் அவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.
ஆனால் இவர்கள் இருவரின் ரசிகர்களும் அவ்வப்போது சமூகவலைத்தளங்களில் வார்த்தை முதலில் ஈடுபடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். அந்த வகையில் இன்றைய தினம் சமூக வலைதளமான டுவிட்டரில் #விஜயும்_ஆக்டர்தான், #அஜித்தும்_ஆம்பளைதான் என்ற ஹாஸ்டேக்கில் ரசிகர்கள் வார்த்தை மோதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஏற்கனவே பலமுறை விஜய் மற்றும் அஜித் அறிக்கைகள் மூலமாகவும், மேடை பேச்சின் போதும் ரசிகர்களுக்கு அறிவுறுத்தியும் சிலர் இது போன்ற வார்த்தை மோதலில் ஈடுபட்டு வருவதும் பிற ரசிகர்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.