நடிகர் அஜித்குமாருக்கு பத்மபூஷன் - தமிழ்நாட்டில் 13 பேருக்கு விருது
பத்ம விருது பெறுபவர்களின் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
பத்ம விருதுகள்
பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களை பெருமைப்படுத்தும் வகையில், ஆண்டுதோறும் இந்தியா அரசு சார்பில், பத்மஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன.
வழக்கம் போல் குடியரசு தினத்திற்கு முந்தைய நாள்(25.01.2025) விருதுக்கு தேர்வானவர்களின் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
அஜித்குமார்
பத்ம விபூஷண் விருதுக்கு 7 பேர், பத்ம பூஷண் விருதுக்கு 19 பேர், பத்ம ஸ்ரீ விருதுக்கு 113 பேர் என மொத்தம் 139 பேர் பத்ம விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் தமிழ்நாட்டை சேர்ந்த 3 பேர் பத்ம பூஷண் விருதுக்கும், 10 பேர் பத்ம ஸ்ரீ விருதுக்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
நடிகர் அஜித்குமார், நடிகை ஷோபனா, தொழிலதிபர் நல்லி குப்புசாமி ஆகிய மூவருக்கும் பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
பத்ம ஸ்ரீ விருது
மதுரையைச் சேர்ந்த பறை இசை கலைஞர் வேலு ஆசான், Hatsun Agro Products நிறுவன தலைவர் R.G.சந்திரமோகன், தெருக்கூத்து கலைஞர் புரிசை கண்ணப்ப சம்பந்தன், கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், புதுச்சேரி தவில் கலைஞர் தட்சிணாமூர்த்தி
பேராசிரியர் எம்.டி. ஸ்ரீனிவாஸ், சமையல் கலைஞர் செஃப் தாமோதரன், புதுக்கோட்டை பாணி மிருதங்கக் கலை வல்லுநர் குருவாயூர் துரை, எழுத்தாளர் சீனி விஸ்வநாதன், சிற்பி ராதாகிருஷ்ணன் தேவசேனாதிபதி, தினமலர் நாளிதழின் இணை நிர்வாக ஆசிரியர் லட்சுமிபதி ராமசுப்பையர் உள்ளிட்டோர் பத்ம ஸ்ரீ விருதுக்கு தேர்வாகியுள்ளனர்.