ஐஸ்வர்யா ராயாவே இருந்தாலும் அது வேண்டாம் - விக்னேஷ் சிவனுக்கு கண்டிஷன் போட்ட அஜித்!

Ajith Kumar Aishwarya Rai Tamil Cinema Vignesh Shivan
By Sumathi 2 வாரங்கள் முன்

ஏகே 62 படத்தின் கதையில் இயக்குநர் விக்னேஷ் சிவன் சில மாற்றங்களை மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏகே 62

நடிகர் அஜித்தின் நடிப்பில் சமீபத்தில் துணிவு திரைப்படம் வெளியானது. இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.அஜித்தின் 62வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்குகிறார். இந்தப் படத்தை லைகா புரடெக்ஷன்ஸ் தயாரிக்கிறது.

ஐஸ்வர்யா ராயாவே இருந்தாலும் அது வேண்டாம் - விக்னேஷ் சிவனுக்கு கண்டிஷன் போட்ட அஜித்! | Ajith Ak62 Vignesh Shivan Made Changes

ஏகே 62 படத்திற்கு பிரபல இசையமைப்பாளரான அனிருத் இசையமைக்கிறார்.அஜித் இரண்டு குழந்தைகளுக்கு அப்பாவாக நடிப்பதாக கூறப்படுகிறது.வில்லனாக அரவிந்த் சாமி நடிக்கிறார். நகைச்சுவை நடிகரான சந்தானம் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.

கண்டிஷன்

அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் நடிக்கவுள்ளது உறுதியாகியுள்ளது. இந்நிலையில் ஏகே 62 படத்தில் ஐஸ்வர்யா ராய் அஜித்துக்கு ஜோடியாக நடிக்கவுள்ள நிலையில் சில ரொமான்ஸ் காட்சிகளில் மாற்றம் செய்யுமாறு கூறியுள்ளாராம் அஜித்.

சமீப காலமாக நடிகர் அஜித், ஹீரோயின்களுடன் ரொமான்டிக் காட்சிகளில் நெருக்கமாக நடிப்பதை குறைத்து வருகிறார். ஏகே 62 படத்தின் படப்பிடிப்பு வரும் மே மாதம் தொடங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.