Wednesday, May 7, 2025

அஜித் வாழ்க, விஜய் வாழ்க கோஷம் - ரசிகர்களுக்கு அஜித் சொன்ன அறிவுரை

Ajith Kumar Tamil Actors
By Karthikraja 4 months ago
Report

பயணமும் விளையாட்டும் முக்கியமானது என அஜித்குமார் கூறியுள்ளார்.

அஜித் கார் ரேஸ்

துபாயில் நடந்த ‘24 ஹெச் சீரிஸ்’ கார் ரேஸில் நடிகர் அஜித்தின் ரேஸிங் அணி 991 பிரிவில் 3 வது இடத்தைப் பிடித்து சாதனைப் படைத்தது.

ajith car race latest photos

இந்திய தேசிய கொடியை ஏந்தியவாறு அஜித் வெற்றியை கொண்டாடிய புகைப்படங்கள் மற்றும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அஜித் பிரபலங்கள் மற்றும் ரசிகர்களின் வாழ்த்து மழையில் நனைந்து வருகிறார்.

விளையாட்டு முக்கியம்

இந்நிலையில் வெற்றிக்கு பிறகு அங்குள்ள ஊடகம் ஒன்றிற்கு அஜித் நேர்காணல் அளித்துள்ளார். இதில் பேசிய அவர், " பயணம் செய்வது வாழ்க்கையில் ஒரு முக்கியமான விஷயம் மற்றும் விளையாட்டுகளிலும் நாம் ஈடுபட வேண்டும். பயணம் செய்யும்போது வெவ்வேறு வகையான மனிதர்களை சந்திக்க முடியும். 

ajith latest photo

விளையாட்டின் போது வெற்றியையும் தோல்வியையும் கருணையுடன் கையாள கற்றுக் கொள்வீர்கள். இதனால்தான் பயணமும் விளையாட்டும் மிக முக்கியமானது. வெற்றியைவிட தோல்வியே உங்களுக்கு பல விஷயங்களைக் கற்றுக் கொடுக்கும். தோல்வி ஒவ்வொரு முடிவையும் எவ்வளவு கவனமாக எடுக்க வேண்டும் என்பதை சொல்லி தரும்.

சாலை விபத்துகளில் நிறைய இளைஞர்கள் உயிரிழப்பதையும் காயமடைவதையும் நான் பார்க்கிறேன். பலரும் ஃபேன்ஸி மோட்டார் சைக்கிளுக்கு நிறைய செலவிடுகின்றனர். ஆனால், அவர்கள் பாதுகாப்பு உபகரணங்களான ஹெல்மட் போன்றவற்றில் கவனம் செலுத்த தவறிவிடுகிறார்கள். 

விஜய் வாழ்க

சமூக வலைத்தளங்கள் தற்போது டாக்சிக் (TOXIC) ஆக உள்ளது. வாழ்க்கை மிகவும் சிறிது. ஏன் இவ்வளவு டாக்சிக் ஆக இருக்கவேண்டும்?. உடல் ஆரோக்கியத்தை தாண்டி மன ஆரோக்கியமும் மிகவும் முக்கியமானது. மற்றவர்கள் என்ன செய்கிறார்கள் எனப் பார்க்காதீர்கள். உங்கள் வாழ்வில் கவனம் செலுத்துங்கள். 

அஜித் வாழ்க, விஜய் வாழ்கனு சொல்றீங்களே, நீங்க எப்ப வாழப் போறீங்க? உங்கள் அனைவரின் அன்புக்கும் நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். ரசிகர்கள் அனைவரும் முதலில் உங்கள் வாழ்க்கையைப் பார்த்துக் கொள்ளுங்கள். என்னுடைய ரசிகர்கள் வாழ்க்கையில் நன்றாக இருக்கிறார்கள் என்பதை பார்க்கும்போது நான் மகிழ்ச்சியடைவேன்." என பேசினார்.  

நன்றி

தற்போது நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், "துபாய் கார் பந்தய ரேஸின் போதும் நிகழ்வுக்கு பின்னரும் இப்போதும் எப்போதும் நீங்கள் எனக்கு கொடுத்து வரும் ஆதரவும் ஊக்கமும் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. உங்கள் அனைவருக்கும் நன்றி சொல்ல எனக்கு வார்த்தைகள் போதவில்லை.  

இந்த பயணம் என்னைப் பற்றியது மட்டுமல்ல! உங்களைப் பற்றியதும்தான். நீங்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை மெய்ப்பிக்க ஒவ்வொரு நொடியும் நான் கடமைப்பட்டுள்ளேன். அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் மற்றும் சங்கராந்தி நல்வாழ்த்துக்கள்! நன்றி!" என கூறியுள்ளார்.