நடிகர் அஜித்துக்கு சீமான் வாழ்த்து

gold ajith seeman
By Jon Mar 09, 2021 11:52 AM GMT
Report

சென்னையில் நடைபெற்ற 46-வது தமிழ்நாடு மாநிலத் துப்பாக்கி சுடுதல் முதல்நிலைப் போட்டியில் ‘சென்னை ரைஃபிள் கிளப்’ அணிக்காக பங்கேற்ற நடிகர் அஜித்குமார் தங்க பதக்கத்தை வென்றார். இவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலர் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், சென்னையில் நடைபெற்ற 46-வது தமிழ்நாடு மாநிலத் துப்பாக்கி சுடுதல் முதல்நிலைப் போட்டியில் ‘சென்னை ரைஃபிள் கிளப்’ அணிக்காக தம்பி அஜித்குமார் அவர்கள் பங்கேற்று 6 பதக்கங்களை வென்ற செய்தியறிந்து பெருமகிழ்ச்சி அடைந்தேன்.

தம்பி அஜீத் திரைப்பட நடிகராக மட்டுமின்றி, துப்பாக்கி சுடுதல் , இரண்டு, நான்கு சக்கர வாகனப் பந்தயங்களில் பங்கெடுத்தல், நவீன எந்திரப் பொறிகளை உருவாக்குதல் உள்ளிட்டப் பன்முகத்திறமைகளைக் கொண்டவராக விளங்குவது பாராட்டுக்குரியது.

இன்றைய இளைய தலைமுறையினர் ஒவ்வொருவரும் தனது தனித்திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்கேற்பத் திகழும் தம்பி அஜீத் அவர்கள் தொடர்ந்து மேலும் பல சாதனைகளைப் புரிய எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன்!