விபத்தில் கணவர் பவார் மரணம்: துணை முதல்வராக பதவியேற்ற மனைவி
மகாராஷ்டிர மாநில துணை முதல்வராக விபத்தில் வலியான அஜித் பவாரின் மனைவி சுநேத்ரா பவார் பதவியேற்றுக்கொண்டார்.
கடந்த 28ம் திகதி பாராமதியில் நடந்த விமான விபத்தில் அஜித் பவார் காலமானார், அரசு மரியாதைப்படி சடங்குகள் செய்யப்பட்டு அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.
துணை முதல்வராக மனைவி
இந்நிலையில் அவரது மனைவியும், மாநிலங்களவை எம்பி-யுமான சுநேத்ரா பவார் இன்று துணை முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்டார், இவர் மகாராஷ்டிராவின் முதல் பெண் துணை முதலமைச்சர் ஆவார்.

மும்பையில் உள்ள லோக் பவனில் நடந்த விழாவில் மகாராஷ்டிரா ஆளுநர் ஆச்சார்யா தேவவிரத் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
பதவியேற்பு விழாவில் முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் பங்கேற்றார்.
இவர் வகித்து வந்த எம்பி பதவி அஜித் பவாரின் மூத்த மகன் பார்த் பவாருக்கு வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.