விவசாயிகள் போராட்டம்: அமித்ஷாவுடன் அஜித் டோவல் ஆலோசனை
டெல்லியில் விவசாயிகளின் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனையில் ஈடுபட்டார். மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் தில்லியில் பல்வேறு விவசாய சங்கங்களைச் சேர்ந்த விவசாயிகள் கடந்த 70 நாள்களுக்கும் மேலாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் போராட்டம் தீவிரப்படுத்தப்படும் என்றும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர். வருகிற 6-ம் தேதி டெல்லி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் விவசாய சங்கள் அறிவித்துள்ளன.
இந்நிலையில் வியாழக்கிழமை பிற்பகல் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், தில்லி காவல் ஆணையர் மற்றும் புலனாய்வுத்துறை அதிகாரிகள் சந்தித்தனர். இந்தக் கூட்டத்தில் விவசாயிகள் போராட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது.