பட்டது எல்லாம் போதும்… இனி இவரை எப்போதும் எடுக்காதீங்க - கடுப்பான இந்திய முன்னாள் வீரர்
தொடர்ந்து சொதப்பி வரும் ரஹானேவிற்கு இனி இந்திய அணியில் இடமே கொடுக்க கூடாது என முன்னாள் கிரிக்கெட் வீரரான டோடா கணேஷ் தெரிவித்துள்ளார்.
இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி, இந்திய அணியுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து விராட் கோலிக்கும், ரோஹித் சர்மாவிற்கும் ஓய்வு வழங்கப்பட்டதால், முதல் போட்டிக்கான இந்திய அணியின் கேப்டனாக ரஹானே நியமிக்கப்பட்டார்.
கான்பூரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் ஸ்ரேயஸ் ஐயர், சுப்மன் கில் போன்ற இளம் வீரர்கள் பலர் மிக சிறப்பாக செயல்பட்டாலும், புஜாரா, ரஹானே போன்ற சீனியர் வீரர்கள் இரண்டு இன்னிங்ஸிலும் மிகப்பெரும் ஏமாற்றமே கொடுத்தனர்.
முதல் போட்டியின் கடைசி 10 ஓவர்களில் இந்திய வீரர்களால், நியூசிலாந்து அணியின் கடைசி ஒரு விக்கெட்டை வீழ்த்த முடியாததால் போட்டியும் டிராவில் முடிந்தது.
இது குறித்து கணேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், “டெய்லண்டர்கள் (பந்துவீச்சாளர்கள்) கூட 15-20 இன்னிங்ஸ் விளையாடினால் ஒரு அரைசதமாவது அடித்துவிடுகிறார்கள் (ரஹானே அதை கூட செய்யவில்லை). எல்லாம் போதும்” என்று சற்று கட்டமாகவே விமர்சித்துள்ளார்.