இந்த அதிரடி ஆட்டத்திற்கு காரணம் இதுதான் - ரஹானே ஓபன் டாக்
சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரர் ரஹானே 29 பந்துகளில் 71 ரன்கள் விளாசி அதிரடி காட்டினார்.
ரஹானே
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிராக சிஎஸ்கே அணி விளையாடியது. அதில் ரஹானே 29 பந்துகளில் 71 ரன்கள் விளாசினார், இதில் ஐந்து சிக்சர்களும், ஆறு பவுண்டரிகளும் அடித்துள்ளார்.
தொடர்ந்து, ஆட்டநாயகன் விருதும் வாங்கினார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ரஹானே, நமது மனது சரியான முறையில் இருந்தாலே அனைத்தும் நன்றாக நடக்கும். இரு காதுகளுக்கும் இடையே இருக்கும் விஷயத்தை நாம் சரியாகப் பார்த்துக் கொள்ள வேண்டும்.
தோனி தலைமை
எங்கள் அணி நல்ல தொடக்கத்தை குடுத்தது, அதனால் பல ரன்களை எடுக்கவேண்டும் என்று நினைத்தேன். நான் ஆடியது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளித்தது. மேலும் நன்றாக எனத் தெரிவித்தார். மேலும், தோனி தலைமையில் நான் பல ஆண்டுகள் இந்தியாவுக்காக விளையாடியிருக்கிறேன். தற்போது சிஎஸ்கேவுக்காக விளையாடும்போது கூட எனக்கு இது கற்றுக் கொள்ள நல்ல வாய்ப்பாக தெரிகிறது.
தோனி பேசுவதை நாம் கவனித்தாலே போதும் நாம் களத்தில் நிச்சயமாக ஜொலிக்க முடியும்.
முன்னதாக, முதலில் ரகானே ரிவர்ஸ் ஸ்கூப் ஆடி சிக்சர் அடித்ததை முன்னாள் கிரிக்கெட் வீரர் பீட்டர்சன் பாராட்டியுள்ளார். தம் வாழ்நாளில் பார்த்த சிறந்த ஷாட் அது என்றும் குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்து அதிரடியாக ஆடுவதால் இந்திய அணியில் இடம் கிடைக்க வேண்டும் என்று ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.