சரியான திட்டம் போட்ட கேப்டன் ரஹானே.. கொடுத்த வேலையை கச்சிதமாக முடித்து கொடுத்த அஸ்வின்

India Test Ajinkya Rahane Ravichandran Ashwin
By Thahir Nov 28, 2021 07:58 PM GMT
Report

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், நியூசிலாந்து அணியின் வெற்றிக்கு 284 ரன்களை இந்திய அணி இலக்காக நிர்ணயித்துள்ளது.

இந்தியா வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இந்த தொடரின் முதல் போட்டி 25ம் தேதி துவங்கியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 345 ரன்கள் எடுத்தது.

இந்திய அணியில் அதிகபட்சமாக ஸ்ரேயஸ் ஐயர் 105 ரன்களும், சுப்மன் கில் 52 ரன்களும் எடுத்தனர்.

இதன்பின் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 296 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக டாம் லதாம் 95 ரன்களும், வில் யங் 89 ரன்களும் எடுத்தனர்.

இதனையடுத்து 49 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை துவங்கிய இந்திய அணி, 7 விக்கெட் இழப்பிற்கு 234 ரன்கள் எடுத்த போது டிக்ளேர் செய்து, நியூசிலாந்து அணியின் வெற்றிக்கு 284 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

இரண்டாவது இன்னிங்ஸில் அதிகபட்சமாக ஸ்ரேயஸ் ஐயர் 65 ரன்களும், சஹா 61 ரன்களும் எடுத்தனர்.

இதன்பின் 284 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சற்று கடின இலக்கை துரத்தி களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு அந்த அணியின் துவக்க வீரரான வில் யங் 2 ரன்னில் விக்கெட்டை இழந்து மிகப்பெரும் ஏமாற்றம் கொடுத்ததன் மூலம்,

போட்டியின் நான்காம் நாளான இன்றைய ஆட்டநேர முடிவில் 4 ரன் எடுத்துள்ள நியூசிலாந்து அணி ஒரு விக்கெட்டையும் இழந்துள்ளது.