ரஹானே சோலி முடிஞ்சு - பார்த்தீவ் பட்டேல் விமர்சனம்
இந்திய அணியின் முன்னாள் வீரர் பார்த்தீவ் பட்டேல் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சொதப்பிய இந்திய அணியின் துணை கேப்டன் அஜிங்கியா ரஹானே குறித்து பேசியுள்ளார்.
இந்தியா - இங்கிலாந்து இடையேயான முதல் 4 டெஸ்ட் போட்டிகளின் முடிவில் இந்திய அணி 2-1 என முன்னிலையில் உள்ளது.
இதனால் கிரிக்கெட் வல்லுநர்கள் உட்பட கிரிக்கெட் ரசிகர்களும் தங்களது பாராட்டு தெரிவித்து வருகின்றனர். அதேபோன்று இந்திய அணியின் துணை கேப்டன் அஜிங்கிய ரஹானேவை விமர்சித்தும் வருகின்றனர்.
அஜிங்கியா ரஹானே இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 7 இன்னிங்சில் பங்கேற்று வெறும் 109 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார்.
இவருக்கு மீண்டும் மீண்டும் இந்திய அணி வாய்ப்பு வழங்கிய பொழுதும் இவர் அதனை சரியாக பயன்படுத்திக் கொள்ளத் தவறிவிட்டார்.
இதனால் அதிருந்தி அடைந்த கிரிக்கெட் வல்லுநர்கள் மற்றும் ரசிகர்கள் ரஹானேவை ஏன்..? இன்னும் அணியில் வைத்துள்ளீர்கள் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த இந்திய அணியின் முன்னாள் வீரர் பார்த்திவ் படெல் ரஹானேவின் சொதப்பல் ஆட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
அதில் பேசிய அவர், அஜிங்கியா ரஹானேவின் இறுதி ஆட்டம் இதுதான் என்று எனக்கு தோன்றுகிறது ஏனென்றால் 2016ஆம் ஆண்டு ரஹானேவின் பேட்டிங் ஆவரேஜ் 54.4 ஆக இருந்தது ,ஆனால் தற்பொழுது இவருடைய பேட்டிங் ஆவரேஜ் வெறும் 39 தான் உள்ளது.
இதிலிருந்து பார்க்கும் பொழுது ரஹானே தற்பொழுது மிகவும் மோசமாக செயல்பட்டு வருகிறார் என்பது தெரிகிறது.இதனால் அடுத்தடுத்த போட்டிகளில் ரஹானேவிற்கு வாய்ப்புகள் வழங்கப்படுவது சந்தேகம்தான் என்று தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர் ரஹானே தனது தவறுகளை மாற்றிக்கொள்ள வேண்டும் பேட்டிங் செய்யும் பொழுது அவருடைய தோல்பட்டையும் பாதமும் சரியான நிலையில் இல்லை, இதனை அவர் மாற்றிக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.
மேலும் ரஹானே எப்பொழுது மிகச் சிறப்பாக விளையாடுகிறாரோ அப்பொழுதுதான் அவரைப் பற்றிய விமர்சனங்கள் அடங்கும். அதுவரை அவரை அனைவரும் விமர்சித்து தான் வருவார்கள் என்றும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.