நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: இந்திய அணிக்கு ரஹானே கேப்டன்?

Captain Ajinkya Rahane T20 World Cup
By Thahir Nov 11, 2021 11:32 PM GMT
Report

இந்தியாவுக்கு வருகை தரும் நியூசிலாந்து கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் ஆடுகிறது.

இந்தியா-நியூசிலாந்து இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி வருகிற 17-ந்தேதி ஜெய்ப்பூரில் நடக்கிறது. டெஸ்ட் போட்டிகள் கான்பூர் (நவ.25-29) மற்றும் மும்பையில் (டிச.3-7) நடக்கிறது.

20 ஓவர் தொடரில் விளையாடும் ரோகித் சர்மாவுக்கு பணிச்சுமையை கருத்தில் கொண்டு டெஸ்ட் தொடரில் ஓய்வு அளிக்க அணி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

இதே போல் தொடக்க டெஸ்டுக்கு கேப்டன் விராட் கோலிக்கும் ஓய்வு அளிக்கப்படும் என்றும், எனவே முதலாவது டெஸ்டில் துணை கேப்டன் அஜிங்யா ரஹானே கேப்டனாக செயல்படுவார் என்றும் கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.