ரசிகனுக்கு புற்றுநோய் .. சைலண்டாக ரஜினி செய்த உதவி - உருகும் ரசிகர்கள்
ரஜினி நற்பணி மன்றத்தின் தலைமை நிர்வாகியும், சூப்பர்ஸ்டாரின் நெருங்கிய நண்பருமான சுதாகர் என்பவர் ட்விட்டரில் ரஜினி பற்றி பரவும் போலி செய்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
இது குறித்து தனது ட்விட்டர் பதிவில் : தலைவர் ரஜினிகாந்தின் அபரிமிதமான நன்மதிப்பை குறைப்பதற்காக இணையத்தில் ஒரு பொய் பிரச்சாரம் உலாவருகிறது.
தலைவர்தான் பாத்துக்கொண்டார்
இந்த இக்கட்டான காலங்களில் தலைவர் எனக்கு உதவவில்லை என்ற செய்தி முற்றிலும் போலியானது உண்மையில் எனது சிறுநீரக புற்றுநோய் சிகிச்சைக்கான கடந்த ஒரு வருட மருத்துவ செலவு முழுவதையும் எந்த ஒரு சிந்தனையும் இல்லாமல் பார்த்துக் கொண்டவர் தலைவர்.
நன்றியோடு இருப்பேன்
இப்போதுவரை அவர் மட்டுமே நிதி மற்றும் தார்மீக ஆதரவை வழங்குகிறார் அதற்காக எங்கள் முழு குடும்பமும் என்றென்றும் நன்றி உள்ளவராக இருப்போம் .
எனது சிகிச்சைக்கான நிதி சேர்க்கும் பிரச்சாரத்தை எனது மகனின் நண்பர்கள் எனக்கு தெரியாமல் அவர்களால் முடிந்த நிதி உதவியை வழங்குவதற்காக தொடங்கினார்கள் .
— Sudhakar (@SudhakarVM) November 13, 2022
ஆனால் தலைவர் எங்களுக்கு உதவாத காரணத்தால் இது தொடங்கப்பட்டது என்ற செய்தி போலியானது
இது தலைவரின் நல்லெண்ணத்தையும் குணத்தையும் பாதித்துள்ளது நான் மிகவும் வருந்துகிறேன் என குறிப்பிட்டுள்ளார்