தனுஷ் -ஐஸ்வர்யா விஷயத்தில் திடீர் திருப்பம் - ரஜினி எடுத்த அதிரடி முடிவு

Rajinikanth dhanush aishwarya ரஜினிகாந்த் தனுஷ் ஐஸ்வர்யா
By Petchi Avudaiappan Feb 07, 2022 10:44 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in பிரபலங்கள்
Report

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா விவாகரத்து விஷயத்தில் நடிகர் ரஜினி அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழ் சினிமாவின் பன்முக கலைஞர் என்றழைக்கப்படும் நடிகர் தனுஷ் சமீபத்தில் தனது காதல் மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்தை விவாகரத்து செய்வதாக அறிவித்தார்.

இந்த சம்பவம் ரசிகர்கள், திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருவரும் மீண்டும் இணைய வேண்டும் என திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதேசமயம் இவர்களை சேர்த்து வைக்க இரண்டு குடும்ப உறுப்பினர்களும் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். 

ரஜினி கோபத்திலும், மன வருத்தத்திலும் மகள் ஐஸ்வர்யாவிடம் பேசாமல் இருக்க மனைவி லதா மீண்டும் சேர்ந்து வாழக்கோரி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், அதேபோல் தனுஷிடம் அவரது அப்பா கஸ்தூரி ராஜா பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் கூறப்படுகிறது. 

இந்நிலையில் திடீர் திருப்பமாக தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ஆகிய இருவரையும் நேரில் அழைத்து நடிகர் ரஜினி பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் சுமூக முடிவு ஏற்படும் என்றும், மீண்டும் தனுஷ்- ஐஸ்வர்யா இணைவார்கள் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.