இந்தியாவுக்கு எதிராக நியூசிலாந்து வீரர் உலக சாதனை

By Fathima Dec 04, 2021 08:19 AM GMT
Report

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்த நிலையில், இரண்டாவது டெஸ்ட் மும்பையில் நடந்து வருகிறது,

இதில் டொஸ் வென்ற கோலி பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார். இதன்படி, நேற்று முதல் நாள் ஆட்டத்தில் 6 விக்கெட் இழப்புக்கு 236 ரன்களை இந்தியா எடுத்திருந்தது.

இந்நிலையில் இன்று 2ம் நாள் முடிவில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் 325 ரன்கள் எடுத்துள்ளது.

இந்த போட்டியில் இந்திய அணியின் அனைத்து விக்கெட்டுகளையும் வீழ்த்தி நியூசிலாந்து வீரரான அஜாஸ் படேல் சாதனை படைத்துள்ளார்.