மேடையில் திருமணமான நடிகரை இழுத்து திடீரென முத்தம் கொடுத்த 51 வயது நடிகை...! - ரசிகர்கள் ஷாக்...!
மேடையில் திருமணம் ஆன நடிகரை இழுத்து முத்தம் கொடுத்த பிரபல நடிகை தபுவின் புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் அஜய் தேவ்கன்
பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜய் தேவ்கன். இவர், நடிகராக மட்டுமல்லாமல் இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார். அஜய் தேவ்கன் மற்றும் எஸ்.எஸ். ராஜமவுலி இயக்கத்தில் வெளியான படம் ‘ஆர்ஆர்ஆர்’. இப்படத்தில், வெங்கட ராம ராஜு என்ற கதாப்பாத்திரத்தில் அஜய் தேவ்கன் நடித்தார்.
மேடையில் நடிகருக்கு முத்தம் கொடுத்த தபு
இந்நிலையில், அஜய் தேவ்கன் பாலிவுட்டில் ‘போலா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் பாலிவுட் நடிகையான தபு போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். ‘போலா’ படம் வரும் மார்ச் 30ம் தேதி திரைக்கு வர இருக்கிறது.
இப்படத்தின் முதல் டீசர் ஏற்கனவே வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சமீபத்தில், இந்த டீசர் விழா மும்பையில் நடைபெற்றது. இந்த விழாவில், நடிகை தபு, நடிகர் அஜய் தேவ்கன் உட்பட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் மேடையில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, நடிகை தபு திடீரென நடிகர் அஜய் தேவ்கனை இழுத்து அணைத்து கன்னத்தில் முத்தமிட்டார்.
அஜய்க்கு தபு முத்தம் கொடுத்த போட்டோக்களும், வீடியோக்களும் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி ரசிகர்களிடையே அதிர்ச்சியை கொடுத்துள்ளது.