சரத்குமார், ராதிகா போட்டியிடயுள்ள தொகுதிகள்- முக்கிய அம்சங்களுடன் தேர்தல் அறிக்கை வெளியானது
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் 6-வது மாநில பொதுக்குழுக் கூட்டம் தூத்துக்குடி திரவியபுரத்தில் இன்று நடைபெற்றது. இந்நிலையில் 'பணமில்லா அரசியல், உண்மையான ஜனநாயகம், எளியவருக்கும் வாய்ப்பு' என்ற தலைப்பில் 12 பக்கங்களை கொண்ட இந்த தேர்தல் அறிக்கையில் பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன.
பண அரசியலை ஒழிப்போம், கல்வி, மருத்துவம், அத்தியாவசிய பொருட்கள் தவிர வேறு எந்த இலவசங்களும் கிடையாது. தனியார் பள்ளி, கல்லூரிகளில் கட்டண விவகாரங்களை அரசே கையாளும். வீட்டுக்கு ஒரு விவசாயியை உருவாக்குவோம். முழுநேரமும் கடைகள் செயல்பட அனுமதி அளிக்கப்படும். தனியார் நிறுவன வேலைவாப்புகளில் தமிழர்களுக்கு 90 சதவீத இடஒதுக்கீடு உறுதி செய்யப்படும்.
ரேசன் பொருட்கள் வீட்டுக்கே நேரடியாக விநியோகம் செய்யப்படும் என்பன உள்ளிட்ட ஏராளமான வாக்குறுதிகள் அதில் இடம் பெற்றுள்ளன.
இதற்கிடையே தென்காசியில் தானும், கோவில்பட்டியில் ராதிகாவும் போட்டியிட வாய்ப்புள்ளதாக சரத்குமார் தெரிவித்துள்ளார்.