“இனி சேர்ந்து வாழ வாய்ப்பில்லை” - ரஜினியை அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஐஸ்வர்யா
நடிகர் தனுஷ் - இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பிரிவு தொடர்பாக நாளுக்கு நாள் பல தகவல்கள் உலா வருவதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும், நடிகர் தனுஷுக்கும் கடந்த 2004 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் உள்ள நிலையில் கடந்த மாதம் இருவரும் பிரிவதாக தங்களது சமூக வலைத்தளம் பக்கம் மூலம் அறிவித்தனர்.
இவர்கள் இருவரது பிரிவிற்கான காரணம் என்ன என்பது குறித்து பல்வேறு விதமான தகவல்கள் வெளிவரும் நிலையில் திரையுலகினர் மட்டுமின்றி ரஜினி, தனுஷ் ரசிகர்களும் இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளாமல் உள்ளனர். அதேசமயம் இருவரையும் சேர்த்து வைக்க இருதரப்பு குடும்ப உறுப்பினர்களும் தீவிர முயற்சி மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
அதில் ஒன்றாக இரு மகன்களுக்காகவும், தனக்காகவும் இருவரும் சேர வேண்டும் என மகள் ஐஸ்வர்யாவிடம் ரஜினிகாந்த் கேட்டுக்கொண்டதாக தகவல் வெளியானது. ஆனால் அதற்கு “நாங்கள் இருவரும் இனி சேர்ந்து வாழ வாய்ப்பில்லை” என ஐஸ்வர்யா கூறி விட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் பிரச்சனை மேல் பிரச்சனைகளை சந்தித்து வரும் ரஜினி மிகுந்த மன வருத்தத்தில் உள்ளதாக திரையுலக வட்டாரத்தில் பேசப்படுகிறது.
You May Like This