தனுஷை தொடர்ந்து ஐஸ்வர்யாவுக்கு வந்த அடுத்த சோதனை - விவகாரத்திற்கு பின் நடக்கும் மர்மம்
இயக்குநர் ஐஸ்வர்யா இயக்கியுள்ள முசாஃபிர் ஆல்பம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை என கூறப்படுகிறது.
நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவும், நடிகர் தனுஷூம் காதலித்து கடந்த 2004 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியினருக்கு யாத்ரா, லிங்கா என மகன்கள் உள்ள நிலையில் இருவரும் பிரிவதாக கடந்த ஜனவரி மாதம் தெரிவித்தனர்.

இதனிடையே ஐஸ்வர்யா நீண்ட இடைவெளிக்குப் பிறகு முசாஃபிர் என்ற ஆல்பம் பாடலை இயக்கியுள்ளார். இந்த பாடல் நேற்று மாலை வெளியானது. இந்த இசை ஆல்பத்திற்கு தமிழில் பயணி எனப் பெயரிடப்பட்டுள்ளது. அன்கித் திவாரி இசையமைத்துள்ள இப்பாடலை தமிழில் அனிருத் பாடியுள்ளார். இதனை முன்னிட்டு யாரும் எதிர்பாராத வகையில் நடிகர் தனுஷ் ட்விட்டரில் வாழ்த்து தெரிவிக்க பதிலுக்கு ஐஸ்வர்யா நன்றி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ஆல்பம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே விவாகரத்துக்கு பின் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான மாறன் திரைப்படம் ரசிகர்களிடம் மோசமான விமர்சனத்தை பெற்றது. இதேபோல் பயணி பாடலும் பெற்றுள்ளதால் தனுஷ்-ஐஸ்வர்யா ரசிகர்கள் கடும் அப்செட்டில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அர்ச்சுனாவுக்கு தெரியும்! விடுதலைப் புலிகள் அமைப்பால் ஆட்சியை கைப்பற்றிய அநுர என்கிறது மகிந்த தரப்பு IBC Tamil
தாலி கட்டுறேனு சொல்லி 1000 முத்தங்கள்.. பிக்பாஸ் முத்துக்குமரன் மீது பெண் பரபரப்பு குற்றச்சாட்டு! Manithan
பிச்சை எடு.. உன் கணவன் ஒரு புலி.... : நீதிமன்றத்தில் சந்தியா எக்னலிகொடவை மிரட்டிய ஞானசாரதேரர் IBC Tamil