நடிகர் தனுஷின் பிரிவை பற்றி உருக்கமாக பேசிய ஐஸ்வர்யா
தனுஷை பிரிவை பற்றி ஐஸ்வர்யா பேட்டி ஒன்றில் உருக்கமாக பேசியுள்ளார்.
கடந்த மாதம் நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் தங்களுடைய 18 வருட திருமண வாழக்கையிலிருந்து பிரிவதாக தங்களது சமூக வளைதல பக்கங்களில் அறிவித்திருந்தனர்.
இந்த அறிவிப்பு அவரது ரசிகர்கள் மட்டுமின்றி அவர்களது குடும்பத்தினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இதனிடையே அவர்கள் இருவரையும் மீண்டும் ஒன்று சேர்த்து வைக்க நண்பர்களும்,குடும்பத்தினரும் முயற்சி செய்து வந்தனர்.
ஆனால் இருவரும் தங்கள் எடுக்கும் திரைப்படங்களில் மிகவும் பிசியாக இருந்து வருகின்றனர்.
இந்நிலையில் ஐஸ்வர்யா அவருடைய திருமண பிரிவை பற்றி பேட்டி ஒன்றில் வாழ்க்கையை நாம் சமாளிக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.
நம் வழியில் வரும் அனைத்தையும் நாம் சமாளிக்க வேண்டும்.இறுதியில் நமக்கென்று என்ன இருக்கிறதோ அது நம்மிடம் வரும் என உருக்கமாக பேசியிருந்தார்.
You May Like This