ஐஸ்வர்யா இப்படி நடிக்காதீங்க..கடுப்பாகும் ரசிகர்கள்..!

Dhanush Rajinikanth Aishwarya Rajinikanth
By Thahir Apr 22, 2022 10:12 AM GMT
Report

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பதிவு செய்துள்ள போஸ்டால் ரசிகர்கள் கடும் கோபமடைந்துள்ளனர்.

கடந்த 2004 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

18 ஆண்டுகளாக மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த இருவரும் கடந்த ஜனவரி மாதம் பிரிவதாக சமூக வலைத்தளத்தில் அறிவித்தனர்.

அவர்களின் இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியிலும் குடும்பத்தினர் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் இருவரும் திரைப்படம் எடுப்பதில் கவனம் செலுத்தி வருகின்றனர்.

நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் தங்கள் வேலைகளில் பிசியாக இருந்து வருகின்றனர். இந்நிலையில் ஐஸ்வர்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய தினசரி வேலைகளின் நிகழ்வுகளையும் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகின்றார்.

ஐஸ்வர்யா இப்படி நடிக்காதீங்க..கடுப்பாகும் ரசிகர்கள்..! | Aishwarya Should Not Act Like This The Bitter Fans

ஐஸ்வர்யா இப்படி எல்லாவற்றையும் ஷேர் செய்வதை சிலர் ரசித்தாலும் பெரும்பாலானோர் விளாசி வருகின்றனர்.

தற்போது வொர்க்கவுட் செய்யும் போட்டோக்களை தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் ஐஸ்வர்யா.

இதனை பார்த்த நெட்டிசன்கள் சூப்பர், ஆல் த பெஸ்ட் என்று பாராட்டியுள்ளனர். அதே நேரத்தில் சில நெட்டிசன்கள் என்னாச்சு உங்களுக்கு? உங்கள் நடத்தையில் ஏன் இவ்வளவு மாற்றம்? ஏன் மற்றவர்களின் செயல்பாடுகளைப் போல் நடிக்கிறீர்கள்? என்று விளாசி வருகின்றனர்.